Sat. Mar 7th, 2026

கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டவர்கள் | பூந்தமல்லி அருகே கைது கத்திகள் பறிமுதல் |

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் பகுதியில் கடந்த 25ம் தேதி அன்று நள்ளிரவில் வாலிபர்கள் மது போதையில் பட்டாகத்தியை வைத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மிரட்டி தகராறு செய்தனர்.

இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடிய தகவலறிந்து அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கடந்த 26ம் தேதி அன்று அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ரவுடி அப்போரோஸ்/33, விஜய்/23, தீபக்/24, கார்த்திக்(எ)காங்கு/20, ஜெய்பால்/25,விஜய்/20, குணசேகரன்/20, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி இரண்டு பேர் தலைமறைவாகி இருந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் 1மணியளவில் பூந்தமல்லி அருகே நடுவங்கரை பாலத்திற்கு கீழ் இருப்பதாக அரும்பாக்கம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று இருவரை கைது செய்து விசாரணை செய்ததில் தலைமறைவாகி இருந்த அரும்பாக்கம் திருவதிம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஐகன்/25, சூளைமேட்டை சேர்ந்த நாகூர் உசேன்/22 இவர்களிடம் இருந்து இரண்டு பட்டாகத்தி மற்றும் 900 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்…

நமது நிருபர்