Sat. May 3rd, 2025

ஆர்எஸ்எஸ் பேரணி வழக்கு – ஒத்திவைத்த நீதிமன்றம்!

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது உச்ச நீதிமன்றத்தில் ஏன் மேல்முறையீடு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

ஆர்.எஸ்.எஸ். தரப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதால், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, உயர்நீதிமன்ற வழக்குகளின் ரோஸ்டர் அட்டவணையைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நவம்பர் 6ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.