மணல் ஏற்றும் டிராக்டரை வைத்து | வாலிபர் கொலையா.? |
மே, 21-2019
திருத்தணி அரசு மருத்துவமனையில் இன்று காலை வாலிபர் ஒருவரை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்த மருத்துவர்களும்ம்ன்அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர் வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த விக்டர்ராஜ். ஆட்டோ ஓட்டுனர் என்பவரின் மகன் வினோத் (26) என்பவர் என்றும் இவர் சென்னையில் பிரபல நிதிநிறுவனம் ஒன்றில் காசாளராக பணிபுரிகிறார் நேற்று இரவு இவரது ஊரில் ஊர் திருவிழா நடைபெற்றுள்ளது திருவிழாவில் அவரது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது அந்த நபர்கள் இன்று காலை வினோத் அவரது ஊரின் அருகே உள்ள சாலையில் நடந்து வரும் பொழுது ஒரு டிராக்டர் வேகமாக வினோத்தின் மீது ஏற்றியதில்…. படுகாயம் அடைந்தார். அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவரது உறவினர்கள் வினோத் மரணத்திற்கு காரணம் எங்கள் ஊர் அருகே உள்ள சின்ன குடிகொண்ட கிராமத்தைச் சேர்ந்த குமாரின் மகன் அப்பு (18). தான் அவரது மணல் டிராக்டர் மூலம் தான் வினோத்தை ஏற்றி கொன்றுள்ளார் இவருக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ஜீவரத்தினம் ஆகியோர்கள் சம்பவத்திற்கு காரணமானவர்கள் என வேலூர் மாவட்டம் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். மணல் வண்டி டிராக்டர் ஏற்றி வாலிபரை கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது…
நமது நிருபர்
