Fri. Jul 24th, 2026

இறந்தவருக்கு வைத்த |பட்டாசுகளை வெடித்த | சிறுவன் படுகாயம் |

மே, 21-2019..,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ளது அருங்குளம் கிராமம். இந்த பகுதியில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதிக்கு உட்பட்ட நெட்டேரி கிராமத்தைச் சேர்ந்த மோகன்.. அவரது மகன் ஜெகதீஸ்(5). அருங்குளம் கிராமத்தில் உள்ள இவரது மாமா வீரராகவன் வீட்டின் அருகே இறந்தார். அவருக்கு பட்டாசு வெடித்து.. பிறகு பிரேதம் அடக்கம் செய்யப்பட்டது. இதில் வெடிக்காமல் இருந்த சில பட்டாசுகளை சாலையில் இருந்து எடுத்து வந்த சிறுவன் ஜெகதீஷ்… சில பட்டாசுகளை வீட்டில் வெடித்துள்ளார். இந்த பட்டாசு அரசு அனுமதி பெறாத நாட்டுப் வெடியாகும். இதனால் அதிக வெடிமருந்து இருந்ததால் இந்த பட்டாசு வெடித்தவுடன் சிறுவனின் கை கால்கள் மற்றும் முகம் படுகாயம் அடைந்தது. அதைத்தொடர்ந்து சிறுவனை உடனடியாக.. அருகே இருந்தவர்கள் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று… முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீக்காயம் அதிகம் இருந்ததால் இந்த சிறுவனை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்…

நமது நிருபர்