(08.11.2023) இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வரும்.
ரிஷபம்
நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.
மிதுனம்
வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்
உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.
சிம்மம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.
கன்னி
உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வீட்டு தேவைகள் பூர்த்தி செய்வதில் வட சற்று சிரமம் ஏற்படும்.
துலாம்
உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனுகூலமாக பலன்கள் உண்டாகும்.
விருச்சிகம்
உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினை குறையும். ஆரோக்கியம் பாதிப்பு குறையும்.
தனுசு
உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம்.
மகரம்
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் நல்லது.
கும்பம்
உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். உறவினர்கள் வழியில் சுவசெலவுகள் ஏற்படும்.
