Sun. May 4th, 2025

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் – காங். தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 39-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், UPA தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன்கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, ராகுல்காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், என் வலிமை, என் பாட்டி… நீங்கள் அனைத்தையும் தியாகம் செய்த இந்தியாவை நான் எப்போதும் பாதுகாப்பேன். உங்கள் நினைவுகள் எப்போதும் என்னுடன், என் இதயத்தில் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.