Fri. May 2nd, 2025

கோவளம் அருகே கார் மோதி கணவன்,மனைவி, குழந்தை பரிதாப சாவு!

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது பின்னால் வந்த கார் மோதியது.

இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகம் ஏற்படுத்தியுள்ளது.

கல்பாக்கம் அனுமின் நிலைய ஊழியரான தனசேகர் அவரின் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இத்தம்பதியுடைய குழந்தை படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.