இன்று நிகழப்போகும் சூரிய கிரகணம்! எந்த நேரத்தில் தெரியுமா?

இந்த ஆண்டு நிகழக்கூடிய இரண்டாவது சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.34 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை நடக்கிறது.
இந்த கிரக நிகழ்வானது. சர்வதேச நேரப்படி அக் 14 பிற்பகல் 3.03.50 மணிக்கு தொடங்கி இரவு 8.55.16 மணிக்கு நிறைவடைகிறது.
சூரிய கிரகணம் எங்கு எல்லாம் காண முடியும்?
இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நடப்பதால் இந்தியாவில் காண இயலாது. சூரிய கிரகணம் எங்கு எல்லாம் காண முடியும்? இந்த நெருப்பு வளைய சூரியகிரகண நிகழ்வானது வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் பல நாடுகளிலும், பசுபிக் கடல் பகுதிகளில் தெளிவாக காண முடியும்.
அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் ஆரிஜோன் முதல் டெக்சாஸ் வரை நன்றாக தெரியும். இந்த கிரகண நிகழ்வின் போது மெக்ஸிகோ, பெனிசுலா, பிரேசிலின் சில பகுதிகள், குவாத்தமாலா, ஹோண்டரஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா, பனாமா, கொலம்பியா மற்றும் பிரேசில். அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் – அலாஸ்காவிலிருந்து அர்ஜெண்டினா வரை பகுதி கிரகணம் தெரியும்.