Mon. May 5th, 2025

சனாதனம் சர்ச்சை பேச்சு வழக்கு – உதயநிதி, சேகர்பாபுவிற்கு ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சனாதனம் சர்ச்சை பேச்சு வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவிற்கு ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதால் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி கிஷோர் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, திமுக எம்.பி.ராசாவுக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கில் அவர்களின் பேச்சு ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அக்டோம்பர் 11ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.