முதன் முதலாக மேடையில் கண்கலங்கி பேசிய கயல்விழி – உணர்ச்சி வசப்பட்ட சீமான்!

தனது மனைவியின் முதல் மேடை பேச்சை கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண் கலங்கியது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
சமீப காலமாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரால் நாம் தமிழர் சீமான் சமூகவலைத்தளங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார். இதனால், சீமானுக்கும், மனைவி கயல்விழிக்கும் இடையே பிரச்சினை என்று சொல்லப்பட்டது.
நேற்று நாம் தமிழர் கட்சியின் மூத்த தலைவர் தடா நா. சந்திரசேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், வதந்திகளை அடித்து நொறுக்கும் வகையில் நேற்று முதன் முதலாக மேடையில் ஏறி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மனைவி கயல்விழி பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில்,
எனக்கு என்ன பேசுறதுனு தெரியவில்லை. இதுவரை நான் மேடை ஏறினது கிடையாது. ஆனா மூத்தவரை (நா. சந்திரசேகரன்) பத்தி எப்படி பேசாம இருக்க முடியும்? அவர்தான் சீமானுக்காக நிறைய பொண்ணு பார்த்தார். மாமா, எனக்கும் சீமானுக்கும் திருமணம் நடைபெறும் என்று உறுதியாக இருந்தார். ஆரம்பத்தில் எனக்கும், சீமானுக்கும் சின்ன சின்ன பிரச்சினை வரும். அப்போ அவரு என்கிட்ட சொல்ற ஒரே வார்த்தை, “தம்பி (சீமான்) ரொம்ப நல்லவன்மா.. அவன் எது பண்ணாலும் சரியா தான்மா இருக்கும்” என்று சொல்வார்.
இப்போ கூட எனக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், எனக்கு நானே சொல்லிக்கொள்கிற வார்த்தை அந்த வார்த்தைதான். மாமாவை நான் தனிப்பட்ட முறையில் தவற விடுறேன் என்று குரல் தழுதழும்ப பேசினார்.
மேடையில் மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைப் பார்த்த சீமான் கண் கலங்கியவாறு உட்கார்ந்திருந்தார். இதைப் பார்த்த மற்ற தொண்டர்களும் உணர்ச்சி வசப்பட்டனர்.