‘சரக்கு’ பட விழாவில் தொகுப்பாளினியிடம் அத்து மீறிய கூல் சுரேஷ் – ஷாக்கான பத்திரிக்கையாளர்கள்!
‘சரக்கு’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்ட கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் அத்துமீறியதை பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமீப காலமாக திரைப்படங்களுக்கு புரமோஷன் செய்கிறேன் என்று தியேட்டரிலும், நிகழ்ச்சி நடக்கும் இடத்திலும் கூல் சுரேஷ் கலந்து கொள்கிறார். இவருடைய அலப்பறைக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் என்ன பேசினாலும், அதற்கும் சில கூட்டம் கைத்தட்டத்தான் செய்கிறது.
இந்நிலையில், நேற்று மன்சூர் அலிகான் நடித்துள்ள ‘சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், மேடையில் நின்றுக்கொண்டிருந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா கழுத்தில் மாலை போட்ட விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
‘சரக்கு’ இசை வெளியீட்டு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த கூல் சுரேஷ் திடீரென்று தன் கழுத்தில் இருந்த மாலையை எடுத்து அருகில் இருந்த தொகுப்பாளி கழுத்தில் போட்டார். உடனே, முகம் சுழித்த தொகுப்பாளினி அந்த மாலையை கீழே தள்ளிவிட்டு, தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.
கூல் சுரேஷின் இந்த செயலுக்கு அன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்து, தொகுப்பாளினியிடம் உடனடியாக மன்னிப்பு கேட்கும்படி கூறினார். அதற்கு கூல் சுரேஷ் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
பின்னர் கூல் சுரேஷின் இந்த செயலுக்கு, பத்திரிக்கையாளர்கள் மற்றும் படக்குழுவினர் உட்பட அனைவரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவிக்க கூல் சுரேஷ் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு, மேடையை விட்டு இறங்கினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கூல் சுரேஷின் இந்த செயலுக்கு கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
