Sat. Mar 7th, 2026

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநரை துடிக்க துடிக்க சரமாரியாக வெட்டி கொன்ற கும்பல் – அதிர்ச்சி சம்பவம்!

நெல்லை அருகே ஆட்டோ டிரைவரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (65). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், விஜயகுமாரை வழிமறித்த மர்மகும்பல் திடீரென்று அவரை சராமரியாக வெட்டி சாய்த்து விட்டு, தப்பி ஓடிவிட்டது.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

மேலும், தப்பி சென்ற குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.