மூத்த பத்திரிகையாளர் ஐயா TJU காளிதாஸ் மறைவு | ஜயாவை என்றும் மறவேன் |

தேசிய பாசறை இதழின் ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் (TJU) தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான ஐயா K.காளிதாஸ் (83) அவர்கள் நேற்று இரவு காலமானார். என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வரை தினமும் பேராண்மை செய்தியினை படித்துவிட்டு எனது கைபேசிக்கு நன்றிகள் காளிதாசன் என்ற வாசகத்தை தொடர்ந்து அனுப்பி வைப்பவர். கொரோனா தொற்று காலத்திலும் வாரத்தில் ஒருமுறை எனக்கு போன் செய்து பேசுவார்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு நான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நேரத்தில் என் கைதுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்.


ஐயா காளிதாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் இத்தனை ஆண்டு காலம் பயணித்த சங்க நிர்வாகிகள் மற்றும் தேசிய பாசறை குழுவினருடன் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டு இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினோம்.


பேராண்மை செய்தி நிறுவனத்தின் நிருபர் எம்.வின்சன்ட் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்பின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் உட்பட தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் சார்பில் M.கிருஷ்ணவேணி, ப.சிவக்குமார், மற்றும் பா.கோட்டீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர். ஐயாவை என்றும் மறவேன் ச.விமலேஷ்வரன் பத்திரிகையாளர்