பாலியல் வழக்கிற்கு பயந்து நித்யானந்தா இந்தியாவை விட்டு தப்பியோடியதாக தகவல்கள்…
பிடதி ஆசிரமத்தில் இருந்த பெண் பக்தை ஒருவரை கடந்த 2010ம் ஆண்டு நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நித்தியானந்தா காலாவதியான தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்ததில், விசாரணை முடியும் வரை பாஸ்போர்ட்டை புதுப்பிக்க காவல்துறை தடை விதித்தது…
இதனிடையே, பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து, விமானம் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பியோட முடியாத நிலையில், சாலை மார்க்கமாக, நித்யானந்தா நேபாளம் சென்று அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் பிரிட்டன் ஆதிக்கத்தில் உள்ள ஒரு தீவுப் பகுதிக்குச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…

