Sun. May 4th, 2025

வடபழனி அரசு பேருந்து பணிமனை | ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் |

வடபழனி அரசு பேருந்து பணிமனை | ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் |

சென்னை வடபழனி பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநராக இருப்பவர்கள் பூங்காவனம் மற்றும் முருகேசன். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் இதன் காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அரசு பேருந்து ஓட்டுநர் முருகேசன், வடபழனி பணிமனையில் பணியிலிருந்த ஓட்டுநர் பூங்காவனத்தை, முருகேசன் என்பவர் தனது நண்பர்களுடன் சென்று இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளார். பின்னர் இருபிரிவுகளாக பிரிந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி போலீசார் 4 அரசு பேருந்து ஓட்டுனர்கள் உட்பட 7 பேர் மீதும் ஆயுதங்களால் தாக்கியது தவறான வார்த்தைகளை பொது இடங்களில் பயன்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுசம்பந்தமாக நேற்று சென்னை சைதாப்பேட்டை 17வது மற்றும் 18வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயா சுதாகர் அவர்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இவர்கள் 7 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்…

பேராண்மை செய்தி குழு