சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் | பிரபல கஞ்சா வியாபாரிகள் கைது |

சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் | பிரபல கஞ்சா வியாபாரிகள் இருவர் கைது |
சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை முழுவதும் கஞ்சா விற்பவர்களை போலீசார் தேடி பிடித்து கைது செய்து வருகின்றனர்..

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையை போலீசார் பின்பற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள பிரபல கஞ்சா வியாபாரியான சேத்துப்பட்டு மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கையா என்பவரை தேடி வந்தனர். அவர் மூன்று கொலை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா வழக்கில் சிக்கி பலமுறை சிறை சென்றவர். பத்துக்கும் மேற்பட்ட முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது…

இவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று வியாசர்பாடி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சாவை வைத்திருப்பதாகவும். வடசென்னையில் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப் போவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து தகவலின் பேரில் MKB நகர் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார் வியாசர்பாடி மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த சரிதா (34) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு சிறியளவில் பல பொட்டலங்கள் கஞ்சா தயார் செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டில் பிரபல கஞ்சா வியாபாரி தங்கையா மற்றும் சத்யா நகரைச் சேர்ந்த வாசு (64) என்பவரும் இருந்ததை அறிந்த போலீசார் மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சரிதா பிரபல கஞ்சா வியாபாரி நாகராஜன் என்பவரின் மனைவி என்றும் அவர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட தங்கையா வாசு சரிதா ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
நிருபர் வே.சரவணன்