பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் ஆந்திராவில் கூட்டாளி ராஜேஷ் என்பவருடன் கைது

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் என்கிற ஆற்காடு சுரேஷ் (45). இவர் மீது வக்கீல் பகவத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு உட்பட 7 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தவிர புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். தலைமறைவாக இருந்த ஆற்காடு சுரேஷை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பு போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு சிறை சென்று வந்துள்ள சுரேஷ் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள பல வழக்குகளில் முறையாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை என்பதால் புளியந்தோப்பு போலீசார் கடந்த சில நாட்களாக அவரை தேடி வந்த நிலையில் ஆந்திராவில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி புளியந்தோப்பு தனிப்படை போலீசார் ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்…
நிருபர் வே.சரவணன்