ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது.
ஆகஸ்ட் 10-2019
சென்னை, திருமங்கலத்தை சேர்ந்த கார்த்திக்(24) ஆட்டோ டிரைவர் ஆவர். இவர் ஒரு பெண்ணிடம் கள்ள காதலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதே பெண்ணை அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் பார்ப்பதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் பிரபுவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதை அறிந்த பிரபு கடந்த 2018ம் ஆண்டு தன்னுடைய நபர்களுடன் சேர்ந்து 10 பேர் கொண்ட கும்பல் திருமங்கலம் வழியாக ஆட்டோவில் வந்த கார்த்திக்கை வழி மடக்கி சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலே கார்த்திக் இறந்து போனார். இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீசார் பிரபு நண்பர்கள் சண்முகம் , பிரகாஷ் , பிரபு , கார்த்திக் ,ராபாட் , ஜாக்காப் , ராகு , இளமாறன் ,சார்லஸ் என 9 பேரை கைது செய்து புழல் சிறை சாலையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கிக் சம்பந்தப்பட்ட
திருமங்கலம் என்.வி.என்நகர் சேர்ந்த ஆட்டோ ஒட்டுனர் கார்த்திக் (எ) கவுச்சி கார்த்திக்(36) என்பவர், கடந்த ஒன்றை வருடமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து பதுங்கி இருந்தபடி… திருமங்கலம் பாடி குப்பத்தில் ஆட்டோ ஓட்டுவதாக திருமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு ஆட்டோவில் அமர்ந்து கொண்டு இருந்த கார்த்திக்கை மடக்கி பிடித்தனர். பின்னர் கைது செய்த கார்த்திக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
-நமது நிருபர்
