பஸ், ரயில் நிலைய பார்க்கிங்கில் பதுக்கிய 16 திருட்டு பைக் பறிமுதல் | 4 பேர் கைது |
ஆகஸ்ட் 09-2019
சென்னை, அயனாவரம் அடுத்த நியூ ஆவடி ரோட்டில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வரும் சண்முகம் என்பவரிடம்… இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றதாக நேற்று அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த இருசக்கர வாகன பதிவு எண் கொண்டு விசாரித்ததில்… அது போலியான எண் என்று தெரியவர அயனாவரம் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது பஸ் டிப்போ அருகே இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் அயனாவரத்தை சேர்ந்த கணேஷ்குமார் (26) மற்றும் செல்லய்யா (26) என்பதும், சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்களின் பூட்டை கத்திரிக்கோல் கொண்டு சாவி இல்லாமல் வாகனத்தை இயக்குவதற்கு ஏதுவாக ஒயர்களை முடக்கி திருடி சென்று விடுவதாக போலீசார் தெரிவித்தனர்.

திருடும் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே உள்ள ரயில் நிலையம் பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன பார்க்கிங் பகுதியில் கட்டணம் செலுத்தி இந்த கும்பல் நிறுத்தி வைத்ததாகவும்.
மொத்தமாக இருபது வாகனங்கள் சேர்ந்த பிறகு சென்னையில் உள்ள ஏஜென்டுகள் மூலமாக குறைந்த விலைக்கு ஆந்திரா, திருவள்ளுர், திருத்தணி, வேலூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் சீசிங் செய்யப்பட்ட வண்டிகள் என்ற பெயரில் விற்றதும் தெரியவர இவர்களுக்கு ஏஜென்டுகளாக திருத்தணியை சேர்ந்த சுனில்குமார் மற்றும் பார்த்திபன் என்பவர்கள் செயல்பட்டு உள்ளதால், கணேஷ்குமார் மற்றும் செல்லையா இருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருத்தணியை சேர்ந்த சுனில்குமார் (25) மற்றும் பார்த்திபனை (30) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அயனாவரம் எடுத்து வந்தனர். இதில் செல்லையா கத்திரிக்கோல் உதவியோடு SPELANDAR மற்றும் PASSION Plus ஆகிய இருசக்கர வாகனங்கள் கண் இமைக்கும் நேரத்தில் திருடுவதில் கில்லாடியாக செயல்ப்பட்டு வந்ததும், இந்த நான்கு பேரில் கணேஷ் மீது ஒரு கொலை வழக்கும், 7 இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் தலைமறைவாக உள்ளவர். என்றும் அதே போல செல்லையா மீது இருசக்கர வாகன திருட்டு வழக்குகளும், பார்த்தீபன் சந்தேகத்தின் பேரில் தனது மனைவியை கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இவர்களிடம் உள்ள 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்…
-நமது நிருபர்
