Volkswagen CAR திருட்டு வழக்கில் மூவர் கைது | 6 பைக் உட்பட கார் பறிமுதல் |
ஆகஸ்ட் 06-2019
சென்னை, திருமங்கலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் ஆனந்தகுமார் (45). இவர் அலுவலக வாசலில் நிறுத்தி வைத்து இருந்த கார் காணவில்லை என்று கடந்த 19-07-2019 அன்று திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கை பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் திருமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக காரில் வந்த மூவரை பிடித்து விசாரிக்க முயன்ற போது கார் நிற்காமல் செல்ல… அவர்களை பிடித்து விசாரணையில் நடத்தியதில் திருமங்கலம் பகுதியில் காரை திருடியது ஒப்புக் கொண்டனர்.

மேலும் விசாரணையில் மேலக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிறில்ராஜ் (22), பாலாஜி (21), மணிகண்டன் (22) ஆகியோர் பாண்டிபஜார் பகுதியில் 2 இருசக்கர வாகனம், செம்மஞ்சேரி பகுதியில் 2 இருசக்கர வாகனம், உட்பட காஞ்சிபுரம் பகுதியில் 2 இருசக்கர வாகனம் திருடியதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் மீது பாண்டி பஜார், செம்மஞ்சேரி, காஞ்சிபுரம், போன்ற காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தவிர இவர்களிடம் இருந்து ஒரு கார், 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததாகவும் திருமங்கலம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
-நமது நிருபர்
