Sat. Mar 7th, 2026

குடோனில் 2 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் | ஒருவர் கைது |

ஆகஸ்ட் 03-2019

சென்னை, கோயம்பேடு பகுதிக்கு உட்பட்ட புவனேஸ்வரி நகரில் உள்ள குடோனில்… இன்று இராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த சையது இப்ராஹிம் (34) என்பவர், குடோனில் குட்காவை பதுக்கி வைத்து இருப்பதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து… சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் ஆய்வு செய்ததில் சட்ட விரோதமாக குட்காவை குடோனில் பதுக்கி வைத்து இருந்ததும், அதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும், குட்கா 20 பெரிய பண்டலும் 5 பெட்டியுமாக கட்டி வைத்து இருந்தனர். இவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் இதன் தொடர்பாக சையது இப்ராஹிம் என்பவரை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

-நமது நிருபர்