Sat. Mar 7th, 2026

பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது.

ஆகஸ்ட் 03-2019

காதலிப்பதாக நடித்து மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த நபர் கைது.

அமைந்தகரை கண்ணையா தெருவை சேர்ந்தவர் எல்லம்மாள் (35). இவருடைய கணவர் நட்ராஜ் இறந்து விட்டதால் எல்லம்மாள் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மகள் யாமினி (15) பெயர் மாற்றப்பட்டுள்ளது. அமைந்தகரை பெண்கள் மேல் நிலைய பள்ளியில் படித்து வருகிறார். இவர்களின் உறவினரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருவதால் அடிக்கடி எல்லம்மாள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மணிமாறன் யாமினி இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதை அறிந்த எல்லம்மாள் யாமினியை கண்டித்ததால் மகள் யாமினியை நேற்று முதல் காணவில்லை என்றும், தனது உறவினரான மணிமாறன் தான் கடத்தி சென்று இருப்பார் என கூறி அமைந்தகரை காவல் நிலையத்தில் எல்லம்மாள் புகார் அளித்தார்.

மணிமாறன்

வழக்கு பதிவு செய்த போலீசார் மணிமாறனின் சொந்த ஊருக்கு சென்று யாமினியை மீட்டு மணிமாறனை கைது செய்தனர். மேலும் மணிமாறன் யாமினி இருவருக்கும் இடையே திருமணம் நடந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். கடத்தல், மைனர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிமாறனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

-நமது நிருபர்