சிறுமியை பாலியல் பலாத்காரம் | வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது |
ஆகஸ்ட் 01-2019
முசிறி அருகே நாச்சம்பட்டி கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. இரு தினங்களுக்கு முன்பு 29/07/19 முசிறி அருகே நாச்சம்பட்டி பகுதிகளில் உள்ள கிராமங்களில் மழை வேண்டி கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் நாடகம் நடைபெற்று வருகிறது. இந்த நாடக நிகழ்ச்சியை காண அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 7- வயது மகளை வீட்டில் தூங்க வைத்து விட்டு நாடகம் பார்க்க சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை அழுது கொண்டே தாயிடம் வந்துள்ளது. பதறிப்போன தாய் தன் மகளைப் பார்த்ததும், குழந்தையின் உடல் முழுவதும் ரத்தக் காயங்களும் மற்றும் நகக்கீறல்கள் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர். 30ம் தேதி அன்று காலை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை சேர்த்துள்ளார். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். என்ற அதிர்ச்சி தகவலை கூறி… முசிறி காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த, நடந்த சம்பவம் குறித்து DSP தமிழ்மாறன் தலைமையில் காவல் ஆய்வாளர் பால்ராஜ் விசாரணை நடத்தினர்.

அதில் நாச்சம்பட்டி கிராமத்தில் உள்ள வாலிபர் தனபால் (23) என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், தனபால் தான் மதுவில் செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார். அவர் மீது முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முசிறியில் தொடர்ந்து குற்றச் செயல்கள் ஈடுப்பட்ட வந்த குற்றவாளிகளை, தேடி பிடித்த காவலர்கள் அனைவரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
-நமது நிருபர்
