Sat. Mar 7th, 2026

அடையாளம் தெரியாத வாகனம் மோதி | சம்பவ இடத்திலேயே பலியான வாலிபர் |

ஜூலை 30-2019

பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே விபத்தில் பலியான வாலிபர்… வெட்டையங் கிணறு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பரது மகன் செந்தில்குமார். இவர் நேற்று மதியம் 12 மணியளவில் பெருந்துறை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சீனாபுரம் ரைஸ்மில் அருகே எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பலியானார்.

அப்போது அந்த பகுதியில் வந்த வாகன ஓட்டிகள் ரோட்டில் ஒருவர் அடிபட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்டு பெருந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்தில் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் செந்தில்குமார் மீது மோதிய வாகனத்தை பற்றிய விவரங்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • நிருபர் சண்முகசுந்தரம்