Sat. Mar 7th, 2026

மாணவியை மிரட்டி செல்போன் பறித்த இரண்டு திருநங்கைகள் கைது.

ஜூலை 29-2019

சென்னை, அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த தீபக் கோயல் (47) என்பவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கடந்த 26-ஆம் தேதி டியூசன் சென்று விட்டு வீட்டிற்கு நடந்துச் சென்று கொண்டு இருந்த போது.. சாந்தி காலனி 5-வது தெருவின் வழியாக வந்த இரண்டு திருநங்கைகள் பள்ளி மாணவியை மிரட்டி அவரிடன் இருந்த 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பிடிங்கி உள்ளனர். பயந்து போன பள்ளி மாணவி தன்னுடைய தந்தை தீபக்கிடம் அழுது கொண்டு நடந்ததை கூற… உடனே தீபக் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த அண்ணா நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில்… செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சனா (28), அம்மு (38) ஆகிய இரண்டு திருநங்கைகள் என்பது தெரியவர… உடனே அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-நமது நிருபர்