கோயம்பேடு பஸ் நிலையத்தில் திடீர் தீ | விபத்தில் கருகிய ஆம்னி பஸ்கள் |
ஜூலை 28-2019
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்களை இயக்குவது போன்று ஆம்னி பஸ்களும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் அருகே வெளியூர்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைப்பதற்கான இடம் உள்ளது. நாள்தோறும் இங்கு 300க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, இரவு நேரங்களில் இங்கிருந்துதான் வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இடத்திலிருந்து நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆம்னி பஸ்சின் பின்பகுதியில் இருந்து எரிய ஆரம்பித்தது. இந்த தீ அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற ஆம்னி பஸ்களும் பரவியது மதிய நேரத்தில் டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் தூங்கி கொண்டிருந்தனர். இதை பார்த்த சக டிரைவர்கள் ஆம்னி பஸ்சில் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். உடனே படுத்துக் கொண்டிருந்த டிரைவர்கள் செய்வது அறியாமல் அவர்களது பஸ்களின் மீது தீ பரவாமல் இருக்க அங்கிருந்த பஸ்களை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அருகருகே ஆம்னி பஸ்கள் நின்று கொண்டு இருந்ததால் பஸ்களை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது…

இது குறித்து தீயணைப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கோயம்பேடு, கீழ்ப்பாக்கம், அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து… தீயணைப்பு வீரர்கள் ஆம்னி பஸ்சில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். தண்ணீர் காலியானதால் டேங்கர் லாரிகளில் இருந்து செல்லப்பட்ட தண்ணீரை கொண்டும் ஆம்னி பஸ்களின் மீது எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இதில் 3 ஆம்னி பஸ்கள் தீயில் எரிந்து நாசமானது..

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தீ விபத்தில் எரிந்து நாசமான ஆம்னி பஸ்களை ஆய்வு செய்தனர் நீண்ட காலமாக ஓடாமல் இருந்த ஆம்னி பஸ்சில் தான் முதலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பஸ்சில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் யாராவது தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றார்களா என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தடயவியல் துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்து வருகின்றனர்.
-பேராண்மை நிருபர் குழு
