Sat. Mar 7th, 2026

உதவி ஆய்வாளர் பெனாசீர்பேகம் நடத்திய கட்டப் பஞ்சாயத்து | பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர் |

ஜூலை 26-2019

உதவி ஆய்வாளர் பெனாசீர் பேகம் நடத்திய கட்டப் பஞ்சாயத்து | பாதிக்கப்பட்ட பெண் புகார் |

சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஷெர்லி பிரியா (34) இவரின் கணவர் ரவிகுமார் ஊடகத்தில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான ஹுண்டாய் கார் ஒன்று வைத்துள்ளார்.

இவர்களுக்கு பழக்கமான கொளத்தூர் பகுதியை சேர்ந்த யாமினி என்பவர் இவரை தொடர்பு கொண்டு அவரும், அவரது கணவர் ரமேஷும், சினிமா ஷூட்டிங் போன்ற நிகழ்ச்சிகளுக்கு காரை வாடகை விடுவதாகவும், உங்களுடைய காரை கொடுத்தால் அதற்கு மாத வாடகை தருவதாக கூறினார். வாடகை கிடைக்கும் என்ற எண்ணத்தில் காரை தந்துள்ளனர். பல நாட்கள் ஆகியும் யாமினி மற்றும் அவரது கணவர் ரமேஷிம் காருக்கு உண்டான வாடகை எதுவும் தராமல் ஏமாற்றி வந்ததும் பிறகு போனில் தொடர்பு கொண்டு ஷெர்லி ப்ரியா கேட்டப்பொழுது யாமினியின் கணவர் ரமேஷ் காரை கொடுக்க முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று அவதூறான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததால் மனவேதனை அடைந்த ஷெர்லி பிரியா அண்ணா நகர் காவல் நிலையத்தில் தனது கணவர் ரவிகுமாருடன் சென்று 08/06/19 அன்று புகார் அளித்துள்ளார்.

அன்று குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்துகுமார் அவர்கள் விடுப்பில் இருந்ததால் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா அவர்கள் நேர்மையான முறையில் விசாரித்து பெண் உதவி ஆய்வாளரை அழைத்து இதனை விசாரிக்கும்படி கூறினார் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி.பெனாசீர்பேகம் அவர்கள் யாமினி அவரது கணவர் ரமேஷை போனில் அழைத்து காரை எடுத்து வரும்படி கூறியுள்ளார். ஆனால் கார் விபத்துக்குள்ளாகி சேதமடைந்து, காரில் உள்ள பாகங்கள் அனைத்தும் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது உதவி ஆய்வாளர் பெனாசீர்பேகம் அவர்கள் ஷெர்லி பிரியா அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் வழக்கும் பதிவு செய்யாமல் நான் உங்களுக்கு பணம் வாங்கி தருகிறேன் என்று கட்டப் பஞ்சாயத்து செய்வது போல யாமினி அவரது கணவர் ரமேஷிடமும் ஜுன் 12ம் தேதி அன்று பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர் ஷெர்லி பிரியாவுக்கு அடுத்த மாதம் இதே தேதி 12/07 அன்று 50 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்துவதாகவும், அதற்கு ஒப்புக் கொள்வதாக ஷெர்லி பிரியா ஆகிய இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு இந்த பிரச்சனை காவல் நிலையத்தை விட்டு வெளியேறினால் போதும் என்ற நோக்கத்தில் இருவரையும் அனுப்பியுள்ளார்.

ஆனால் பேசியபடி இதுவரைக்கும் காரின் சேதமான பாகங்களுக்கு உண்டான பணத்தை வாங்கி தரவில்லை என்றும் தினமும் காவல் நிலையம் சென்று கேட்ட கார் உரிமையாளரிடம் உதவி ஆய்வாளர் பெனாசீர்பேகம் இனி என்னால் எந்த நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி புகார் அளித்து 48- நாட்கள் கழித்து இன்று 26/07 காலை CSR வழங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த நான் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலில் உள்ளானதாகவும், எனக்கு பணம் வேண்டாம் என்றும் அவர்கள் இருவர் மீதும், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் உதவி ஆய்வாளர் பெனாசீர்பேகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் ஷெர்லி பிரியா தெரிவிக்கின்றார்..

இந்நிலையில் நாம் விசாரிக்கும் போது நமக்கு கிடைத்த தகவலின்படி உதவி ஆய்வாளர் திருமதி.பெனாசீர்பேகம் அவர்கள் உயர் அதிகாரிகளின் சிபாரின் பேரில் பல வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவில் பணி புரிந்து வருவதாகவும்.
பொதுவாக சென்னை அண்ணா நகர் பகுதி என்பது உயர்மட்ட மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ள சென்னையின் முக்கிய அம்சம் உள்ள காவல் நிலையம் என்பதால் பெரிய மனிதர்களின் நட்புகள் மிகவும் சுலபமாக கிடைக்கும் இதை பயன்படுத்தி ஒருசிலர் இங்கு இருந்து இடமாற்றம் பெறாமல் உள்ளதையும் தெரிவிக்கின்றனர்…

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் திரு.எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள் எந்த காரணத்திற்காகவும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் உயர் அதிகாரிகள் ஒரே காவல் நிலையத்தில் தொடர்ந்து பணிபுரிய கூடாது என்றும் இதை எந்த அதிகாரிகளும் அனுமதிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது…

-பேராண்மை நிருபர் குழு