Sat. Mar 7th, 2026

தோழியுடன் சேர்ந்து கணவனை | கொலை செய்த இரண்டு பெண்கள் கைது |

ஜூலை 22-2019

கோயம்பேடு அருகே கள்ளக் காதலை கண்டித்த கணவனை கொலை செய்த மனைவி மற்றும் தோழி இருவர் கைது கள்ளக்காதலன் தலைமறைவு.

சென்னை, நெற்குன்றம் சக்தி நகர் 24 வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவர் ஆட்டோ டிரைவர் ஆக பணிபுரிகிறார். இவருக்கு காயத்ரி(26) என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். நாகராஜ் கடந்த ஏழு வருடத்துக்கு முன்பு காயத்திரி எனபவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன்(30). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். நாகராஜ் என்பவரும் மகேந்தின் என்பவரும் நண்பர்கள். நட்பு ரீதியில் மகேந்திரன் நாகராஜ் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதன் மூலம் நாகராஜின் மனைவி காயத்ரிக்கும் மகேந்திரனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காயத்திரியும் மகேந்திரனும் ஒன்றாக இருந்ததை நாகராஜ் பார்த்து விட்டார்.

அதனால் கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். மீண்டும் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு இருவரும் சமாதானம் ஆகிவிட மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் நாகராஜ் பார்ப்பவர்களிடம் மகேந்திரன் எனக்கு துரோகம் செய்து விட்டான். அவனை கொல்லாமல் விட மாட்டேன் என்று கூறி வந்ததாகவும் விஷயம் கேள்விப்பட்ட மகேந்திரனின் மனைவி பானு (25) எனது கணவரை நாகராஜ் கொலை செய்து விடுவதாக எதற்காக கூறிவருகிறார் என்று காயத்திரியிடம் கூற… இது சம்பந்தமாக இருவரும் பேசியதும். அப்போது காயத்திரி என்னுடைய கணவர் என்னை தினமும் கொடுமைப்படுத்தி வருகிறார். அவனை நாம் இருவரும் சேர்ந்து கொலை செய்து விட்டால் இனி நமக்கு எந்த பிரச்சனையும் வராது என்று திட்டம் தீட்டி, நேற்று முன்தினம் இரவு 1:30 மணி அளவில் நாகராஜ் வீட்டில் வந்து பானுவும் காயத்திரியும் சேர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த நாகராஜின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி துப்பட்டாவை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு பானு தன்னுடைய வீட்டுக்கு சென்று விட்டார். வழக்கம் போல காயத்திரி இன்று அதிகாலை 4 மணி அளவில் தனது அக்கா தனலட்சுமி வீட்டில் தன்னுடைய குழந்தைகளை விட்டு விட்டு தம்பி வினோத் என்பவரின் ஆட்டோவில் ஏரி வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு வந்துள்ளார். மேலும் ஆட்டோவில் செல்லும் போது தனது தம்பி வினோத்திடம் மாமா இரவு முழுவதும் தூங்காமல், தனக்கு அசிங்கமாக உள்ளதாகவும் என்று கூறி… தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக புலம்பிக் கொண்டு இருந்தார். அவரைப் பார்த்துக்கொள் என்று காயத்திரி கூறியுள்ளார். வினோத் தனது அக்கா வீட்டிற்கு சென்று பார்க்கும்போது நாகராஜ் காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்து கழுத்தில் துப்பட்டா சுற்றியபடி இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த வினோத் உறவினர் மற்றும் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பிரேத விசாரணை அறிக்கையில் நாகராஜ் இறப்பிறக்கான காரணம் மூக்கு மற்றும் வாயை பொத்தியதால் தான் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவர் ஜீவானந்தம் கூறியுள்ளார். இதை அடுத்து கோயம்பேடு போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து நாகராஜ் மனைவி காயத்திரி மற்றும் மகேந்திரன் மனைவி பானு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மகேந்திரனுக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதா.? ஏன் தலை மறைவாக உள்ளார்.? என்றும் அவரை கைது செய்ய கோயம்பேடு தனிப்படை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்…

-நமது நிருபர்