Sat. Mar 7th, 2026

வீடுகளில் புகுந்து செல்போன் திருடும் | சிறுவனை பிடிக்க வீடியோவுடன் புகார் |

ஜூலை 22-2019

சென்னை வளசரவாக்கம், அன்பு நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில்… அடிக்கடி செல்போன்கள் காணாமல் போவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, இன்று குடியிருப்பு வளாகத்திற்குள் வரும் சிறுவன் சுற்றிப் பார்த்து விட்டு வீட்டிற்குள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கொண்டு அங்கிருக்கும் செல்போன்களை எடுத்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளதை ஆதாரமாக தந்து… கோயம்பேடு காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளனர்…

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உரிய முறையில் தொடர்ந்து போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு செல்போன் திருடி செல்லும் சிறுவனை கண்டுபிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்…

-நமது நிருபர்