பெண் டாக்டரை திருமணம் செய்வதாக ₹30 லட்சம் ஏமாற்றிய வாலிபரிடம் போலீஸ் விசாரணை.
ஜூலை 22-2019
சென்னை பரங்கிமலையில் பெண் டாக்டரை திருமணம் செய்வதாக ஏமாற்றி ₹30 லட்சம் பணம் நகை பெற்று மோசடி செய்த வாலிபரிடம் மகளிர் போலீசார் விசாரணை.
சென்னை ஆலந்தூர் வடக்கு ராஜா தெருவை சேர்ந்தவர் குமாரி(28)(பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது) இவர் எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் குமாரிக்கும் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான சந்தோஷ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சந்தோஷும் தனக்கும் திருமணமாகி விவாகரத்து ஆனதாக கூறி திருணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளர். இதனை குமாரியும் நம்பியுள்ளார்.. இதற்கிடையில் பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் சந்தோஷ் மீது குமாரி புகார் கொடுத்துள்ளார். அதில் சந்தோஷ் தண்ணிடம் ₹30 லட்சம் ரொக்கமும், 14 சவரன் தங்க நகைகளையும் பெற்றுக்கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருவதாகவும், கொடுத்த ரொக்கம் நகைகளை திருப்பி கேட்டால் மிரட்டல் விடுப்பதாகவும் அதில் கூறி இருந்தார். இது குறித்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்…
-நமது நிருபர்
