தங்கையின் மரணத்தில் சந்தேகம் | அண்ணன் காவல் நிலையத்தில் புகார் |
ஜூலை 16-2019
சென்னை வளையாபதி சாலை முகப்பேறு கிழக்கு தெருவை சேர்ந்தவர் நளினி (35). இவருடைய கணவர் பாலாஜி (35). இவர் இறந்ததால் தனியாக வாழ்ந்த நளினி… இரண்டாவதாக லக்ஷ்மிகுமார் (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஆந்திராவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார்.
இரண்டாவது கணவர் லக்ஷ்மிகுமார் அடிக்கடி ஆந்திராவுக்கு சென்று விடுவதால் நளினி தன்னுடைய மகன்கள் சாய், சரண் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நன்றாக இருந்த நளினி இன்று காலை மூக்கில் ரத்தம் வந்தபடி இறந்து கிடந்தார்.
இது குறித்து நளினியின் அண்ணன் பாலாஜி.. என் தங்கை சாவில் மர்மம் இருப்பதாக விசாரணை செய்யக்கூறி ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
-நமது நிருபர்
