Sat. Mar 7th, 2026

அரசு பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி | ஒருவர் காயம் |

ஜூலை 16-2019..,

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சிவன், பவானி மற்றும் லட்சுமி ஆகியோர் குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். சைதாப்பேட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வேலைக்காக பவானி, லட்சுமி, சிவன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை சிவன் ஓட்டிச் சென்றார்.

இவர்கள் நந்தனம் அருகே செல்லும்போது சைதாப்பேட்டையில் இருந்து பிராட்வே செல்லும் அரசு பேருந்து சிவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லட்சுமி மற்றும் பவானி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சிவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்… அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் லட்சுமி மற்றும் பவானி ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பஸ் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

  • நிருபர் ராம்