Sun. Mar 8th, 2026

69 சவரன் நகைகளை மீட்ட போலீசாரை | காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு |

ஜூலை 2-2019

கடந்த 27 ஆம் தேதி திருவேற்காடு எல்லைக்குட்பட்ட அயனம்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் என்ற பகுதியில்… போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகேயுள்ள முட்புதரில் அமர்ந்திருந்த மூன்று வெளிமாநில நபர்கள்… போலீசை கண்டதும் தப்பி ஓடினர். உடனே அவர்கள் ஓடுவதில் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை ஓடிச்சென்று மூவரில் இருவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், வீட்டின் பூட்டை உடைக்க பயன்படும் உபகரணங்கள் போன்றவை கவ்பார், இரும்பு கம்பிகள், 2 கைகடிகாரங்கள், 2 வெள்ளி கொழுசு மற்றும் 2 செல்போன் வைத்திருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து பிடிபட்ட மத்திய பிரதேசம் தட்ராபாத் கிராமம் குச்சி தாலுகாவை சேர்ந்தா ரிச்சு/45 மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ்/26 என்ற இரண்டு குற்றவாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்து, மேற்படியாக அவர்களிடம் இருந்து 69 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்த குற்றவாளிகளை கைது செய்த டி-5 திருவேற்காடு காவல் உதவி ஆய்வாளர் பி.ரவீந்தரன் மற்றும் காவலர்கள் ஆதீஸ்பாபு, பிரதீப் மற்றும் ஊர்காவல் படையைச்சேர்ந்த நிர்மல்குமார், ஹமர், சிவா ஆகியோரை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து நேற்று பாராட்டினார்…

நிருபர் ராம்