Sun. Mar 8th, 2026

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட | திருநங்கை ஒருவரும் கைது |

ஜூலை 2-2019

கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பயணியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட, திருநங்கை உட்பட மூவர்… நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையில், டைல்ஸ் மேஸ்திரியாக பணியாற்றி வருபவர் குப்புசாமி ( வயது 24 ) .கடந்த 29 ம் தேதி, சென்னையில் இருந்து சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த திருநங்கை ஒருவர், அவரிடமுள்ள பணத்தை பிடுங்க முயற்சித்துள்ளார். முயற்சி தோல்வியுற, தனது நண்பர்களை அழைத்து, அவரிடமிருந்து 6000 ரூபாய் பணத்தை மூவரும் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட குப்புசாமி, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில்… சம்பவ இடத்தை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். பின், வழக்கு பதிவு செய்து, பேருந்து நிலையத்தில் விசாரணை நடத்திய போலீசார்.. வழிப்பறியில் ஈடுபட்டது, கோயம்பேடு நியூ காலணியைச் சார்ந்த திருநங்கை மாயா (வயது 28 ) என்பது தெரிய வந்தது.

மேலும், அவரை கைது செய்தப் பின், வழிப்பறியில் தொடர்புடையவர்கள் குறித்து, மாயாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோபி கண்ணன் (வயது 35), மாலு குட்டி (வயது 30) ஆகியோர் வழிப்பறிக்கு உடந்தையாக இருந்ததாக அவர் கூறிய நிலையில்… அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியப் பின், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொந்த ஊருக்குச் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தவரிடம், திருநங்கை உட்பட மூவர் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.!

  • நமது நிருபர்