Sun. Mar 8th, 2026

தேங்கிக் கிடக்கும் குப்பை | கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் |

ஜூன் 27-2019

சென்னை, ஜோன்ஸ் பிரதான சாலையில் குப்பை தொட்டிகள் இருந்தும்… அங்கு குப்பைகள் நிரம்பும்படி விடப்பட்டுள்ளன. பல நாட்களாக குப்பைகளை அப்புறபடுத்தாமல் தேங்க விடப்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

பல புகார்கள்… இது தொடர்பாக அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என… அங்கு வசிக்கும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.!

மேலும் இதை அப்புறப்படுத்தாத காரணத்தினால், துர்நாற்றர் பரவி வருகிறது. தவிர தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவ்விடத்தில் வசிப்பதால் நோய்க்கு ஆளாவோமோ என அஞ்சுகின்றனர்.!!

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது.

நிருபர் ராம்