Sun. Mar 8th, 2026

கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு.

ஜூன் 27-2019..,

கோவையை அடுத்த கீரைநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான வெண் பண்றி வளர்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதை அடுத்து, சுத்தம் செய்யும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக… கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு வெளியாகி தொழிலாளர்கள் மூவரும் ஒவ்வொருவராக மயங்கி, கழிவுநீர் தொட்டியில் விழுந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூவரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு… சிகிச்சி பலனின்றி மூவரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக… கோவிலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விஷ வாயு தாக்கி, மூவர் உயிரிழந்தது… அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

நிருபர் கோகுலன்