Sun. Mar 8th, 2026

குடும்பத் தகராறில் | பெண் மருத்துவர் தற்கொலை |

ஜூன் 23-2019…,

செங்கல்பட்டு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்… பணியாற்றி வருபவர், அரசு பெண் மருத்துவர் வளர்மதி (32). இவர் கடந்த வெள்ளி கிழமை மதியம், பெருங்களத்தூர் அருகே பீர்க்கங்கரணை பகுதியில்… தனது இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் மகரஜோதியும் அரசு மருத்துவராக உள்ளார்.

இவர்கள் கூடுவாஞ்சேரி பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். மேலும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இருவருக்குமான பிரச்சினை முற்றிய நிலையில்… மருத்துவர் வளர்மதி மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக… அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது… அரசு மருத்துவமனை ஊழியர்களுகு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.!

நமது நிருபர்