Sun. Mar 8th, 2026

செயலற்றுக் கிடக்கும் நாய்களின் கருத்தடை மையம்.

ஜூன் 23-2019

காஞ்சிபுரம், திருக்காலிமேடு பகுதியில் தெரு நாய்களுக்கு தொற்றுநோய் ஏற்படுவதால் அப்பகுதி துர்நாற்றத்தில் மூழ்கியுள்ளது.

காஞ்சி திருக்காலிமேட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகில் நாய்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க… இனப்பெருக்க கருத்தடை மையம் உள்ளது.

ஆனால் இந்த கருத்தடை மையம் திறந்த நாள் முதல் இன்று வரை செயல்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. ஆனால் காஞ்சிபுரம் பெருநகராட்சியில் இது சம்பந்தமாக.. எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தெரு நாய்களின் உற்பத்தி அதிகமாகிக் கொண்டே வருகிறது. மேலும் தெரு நாய்களுக்கு ஏற்படும் நோய் தொற்றுக்களால் அப்பகுதியில் துர்நாற்றம் மிகுந்தே காணப்படுகிறது.

நாய்களுக்கு ஏற்படும் நோய் தொற்றுக்கள் மற்றும் தெரு நாய்கள் உற்பத்தியை கட்டுபடுத்தாத.. சம்பந்தமான ஊழியர்களும் மற்றும் இந்த கட்டிடமும் வேறு ஏதேனும் பயன்பாட்டிற்கு உபயோகமாக பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் இப்பகுதி பொதுமக்கள்…

நமது நிருபர்