Sun. Mar 8th, 2026

பொது இடத்தில் கோவில் கட்டினால் புன்னியம்! | நடைபாதையில் கடைபோட்டால் அநியாயம்! |

ஜூன் 12-2019..,

சாமிக்கு ஒரு சட்டம்… சாமானியனுக்கு ஒரு சட்டமா???

சென்னை மாநகராட்சியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை குறித்த தகவலை வெல்ஃபேர் கட்சியின் சார்பாக கடந்த ஜனவரி 2/2019 ஆம் தேதி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.

இதே விஷயத்தை சென்னை உயர்நீதிமன்றமும் கடந்த 22 ஜனவரி 2019 தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இருந்து ஒவ்வொன்றாக தகவல் நமக்கு வந்து கொண்டிருக்கின்றது அதில் உள்ள தகவலின் அடிப்படையில் ஒரு செய்தியை மட்டும் இங்கு தோழர்களுக்கு பகிர்கிறேன்.

படம் 1. சென்னை மாநகராட்சி மண்டலம் 8ல் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சாய் பாபா கோவில். ஆக்கிரமிப்பு என்று சொன்னால் நூறு இருநூறு சதுர அடியில்லை 30,000 சதுர அடி இன்றைய சந்தை மதிப்பு சுமார் 35 கோடி

இதை அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பொருளாதார சரிவால் தங்களின் வாழ்வை இழந்து தவித்துக் கொண்டிருக்க கூடிய மக்களில் ஒரு பகுதியினர் சிறு வியாபாரிகள்.

அந்த சிறு வியாபாரிகள் தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்காக நடைபாதையை ஆக்கிரமித்திருந்தது கடைகள் அமைத்தால் .

அந்த நடைபாதை கடைகளையும் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்துகிறது மாநகராட்சி நிர்வாகம்……

அப்படி நடைபாதை கடைகளை அப்புறப்படுத்திய நகராட்சி நிர்வாகம்., எப்பொழுது ஆக்கிரமித்து கட்டப்பட்ட “வழிப்பாட்டு தலங்களை”அப்புறப்படுத்த போகிறது என்பதே இப்போதைய கேள்வி.