Sun. Mar 8th, 2026

நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறித்து சென்ற 4 சிறுவர்கள் கைது.

ஜூன் 09-2019

சென்னை, அமைந்தகரை எம்.எம். காலணி சேர்ந்த துரை (30). தனியார் கம்பனியில் பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 7 ஆம் தேதி இரவு 11 மணி அளவில் அரும்பாக்கம் சிவசக்தி நகர் வழியாக செல்போனில் பேசி கொண்டு வந்தார்.

அந்த வழியாக வந்த 4 சிறுவர்கள் துறை என்பவரிடம் இருந்து 10,000 மதிப்புள்ள செல்போனை பறித்து தப்பி சென்றனர். இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த அரும்பாக்கம் போலிசார் தேடி வந்த நிலையில்… எம்.எம்.ஏ மார்க்கெட் அருகில் 4 சிறுவர்களை அழைத்து சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் துறை என்பவரிடம் செல்போன் பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து பிடிபட்ட சிறுவர்களன மாதேஷ் , தமிழரசன், வசந்த் , சினிவாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து… கெல்லீசில் உள்ள சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.