லாரி மோதி இருவர் பலி | ஒருவர் படுகாயம் |
ஜூன் 09-2019
மருத்துவமனையில் அனுமதி லாரி ஒட்டுனர் கைது சென்னை, திருவேற்காடு அன்னை சத்தியா நகரைச் சேர்ந்த விஜய் வயது 17, பரத் வயது 24 , சுரேந்தர் ஆகியோர் மூன்று பேரும் கடந்த 08 ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில்… கோயம்பேட்டில் இருந்து திருவேற்காடு செல்லும் போது… இவர்களுக்கு பின்னே வந்த லாரி இரு சக்கர வாகனத்தில் மோதியதில்… இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்த விஜய்… நசுங்கி சம்பவ இடத்திலே பலி. இவருடைய நண்பர் பரத் என்பவருடைய வலது கால் நசுங்கியது. சுரேந்தர் என்பவருக்கு இடது கை நசுங்கியது.
உடனே கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விஜய்… உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அதைத்தொடர்ந்து பரத் , சுரேந்தர் இருவரையும் 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் மோதிய லாரி ஓட்டுனர் திருவேற்காடை சேர்ந்த மனோகரன் (40) என்பவரை கைது செய்து விசாரணை.
வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் கிழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது நிருபர்
