காதல் தோல்வியில்.? வாலிபர் | தூக்கு மாட்டி தற்கொலை |
ஜூன், 09-2019…,
சென்னை, அமைந்தகரை எம்.எம். காலணி, ஈ.பிளாக்கை சேர்ந்தவர் ரவி (47). இவருடைய மகன் ஏழுமலை (20) இவர் YAMAHA SHOWROOM ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை தனது காதலி தனக்கு கிடைக்காத விரக்தியில் ஏழுமலை தன்னுடைய நண்பர்களிடம்… நான் தூக்கு மாட்டி தற்கொலை செய்யப் போகிறேன் என்று வீடியோ காலில் பேசி கொண்டு… தன்னுடைய வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், ஏழுமலை… ஒருதலை காதலால் தான் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் உண்டா என விசாரணை நடத்தி வருகின்றனர்…
நமது நிருபர்
