வழிதவறி சுற்றித் திரிந்த கல்லூரி மாணவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு…

மே, 26-2019
வழிதவறி வந்து திருமங்கலம் பகுதியில் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு…
மதுரை மாவட்டத்தை சேர்ந்த முருகன். இவருடைய மகன் ரிஷிகுமார் (19). இவர் கோயமுத்தூரில் உள்ள நேரு கல்லூரியில் ஏரோநாடிக்கல் பொறியியல் படிப்பு 2ம் வருடம் படித்து வருவதாகவும், அடிக்கடி சுயநினைவு இழந்து வருவதாகவும், குழப்ப நிலையில் விடுமுறைக்கு வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் வெவ்வேறு இடங்களில் கடந்த 23.05.19 முதல் சுற்றி நேற்று இரவு திருமங்கலம் பகுதியில் சுற்றி திரிந்தார்.

இரவு பணியில் ரோந்து வாகனத்தில் அந்த வழியாக வந்த ஆய்வாளர் சரவணன் தனியாக நடந்த சென்ற வாலிபரை அழைத்து விசாரணை செய்தனர்.
அந்த மாணவன் கூறியதாவது.
சார் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். என்னுடைய தந்தை பெயர் முருகன். என் வீட்டுக்கு போக வழி தெரியாமல் இரண்டு நாட்களாக சுற்றி வருகிறேன். என் வீட்டுக்கு சரியாக வழி தெரியவில்லை சார் என்று கண்ணீர் விட்டு அழுதார். உடனே ஆய்வாளர் சரவணன் கல்லூரி மாணவனின் தந்தை முருகன் விலாசத்தை கண்டு பிடித்து… அவருடைய தொலைபேசி மூலமாக பேசி… உங்கள் மகனை சென்னையில் உள்ள திருமங்கலம் காவல் நிலையத்தில் பத்திரமாக வைத்துள்ளோம் என்று கூறினார். உடனே மகனை தேடி சென்னை வந்த முருகன், திருமங்கலம் காவல் நிலையத்துக்கு வந்து ஆய்வாளர் சரவணனுக்கு நன்றி கூறி மகனை அழைத்துச் சென்றார்…
நமது நிருபர்