ராட்டினத்தில் சிக்கி 8- வயது சிறுவன் பலி |
மே, 21-2019…,
சென்னை நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன். இவர் மெரினா கடற்கரையில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் பிரணவ்(8). பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள மெரினா கடற்கரை பகுதியில் இருந்த ராட்டினம் அருகே நேற்று 20ஆம் தேதி மாலை விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அதை கவனிக்காமல் ராட்டினத்தை இயக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது சிறுவனின் சட்டை ராட்டினத்தின் கொக்கியில் பட்டு சிறுவன் ராட்டினத்தில் சிக்கினான். அதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் பிரணவை, அவரது தந்தை பத்மநாதன் சிகிச்சைக்காக கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துமனைக்கு தூக்கி சென்றார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராட்டினத்தை இயக்கிய அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…
நமது நிருபர்
