சாமியிடம் செல்கிறேன் என வாழ்த்து செய்தி | அனுப்பிவிட்டு வாலிபர் தற்கொலை |
மே, 20-2919
ஜெ.ஜெ.நகர் பகுதியில் கோவில் பூசாரி வாட்ஸ்ஆப் மூலமாக அனைவருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பி விட்டு… தன்னுடைய வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை.
வில்லிவாக்கத்தை சேர்ந்த சந்திரசேகர். இவர் ஐ.சி.எப் ரயில்வேயில் பணிபுரிகிறார். இவருடைய மனைவி கலா அரசியலில் உள்ளார் முரளி(22) பூவண்ணன்(18) இரு மகன்கள் உள்ளனர். இதில் முரளி என்பவர் தன்னுடைய அப்பா அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டு ஜெ.ஜெ.நகரில் தனியாக வீடு எடுத்து வாடகையில் தங்கி அதே பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முரளி இணையதளம் மூலமாக தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே வாழ்த்தி பேசிவிட்டு நான் சாமியிடம் செல்கிறேன் என்று இணைப்பை துண்டித்துவிட்டார். பின்
திடீர் என்று தன்னுடைய வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் சுரேந்தர் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்.
பின்பு வழக்கு பதிவு செய்த ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் இணையதளம் மூலமாக எல்லாரையும் வாழ்த்திவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு…
நமது நிருபர்
