லாரி மோதி வாலிபர் பலி | லாரி டிரைவர் கைது |
மே, 21-2019…,
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார்(24). இவர் தற்போது சென்னையில் தங்கி தனியார் கம்பனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 19 ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் பூந்தமல்லியிலிருந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தினேஷ்குமார் கோயம்பேடு வழியாக வரும்போது… அந்த வழியாக வேகமாக வந்த வாட்டர் டேங்கர் லாரி ஒன்று தினேஷ்குமார் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே தினேஷ்குமார் உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு போலீசார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதைகாக அனுப்பி வைத்தனர். பின் நெற்குன்றம் குமுதவள்ளி தெருவை சேர்ந்த வாட்டர் டேங்கர் லாரி ஓட்டுனர் குமார்(47) என்பவரை கைது செய்து அவர் மீது 304-A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்
