Sun. Mar 8th, 2026

கோயம்பேடு பஸ் நிலையத்தில் | தொடர் கொள்ளை |

மே, 17-2019…,

கோயம்பேடு பஸ் நிலையத்தில் கல்லூரி பேராசிரியரின் 35 சவரன் நகை உட்பட 19 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை.. கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பேராசிரியராக பணியாற்றிய ஜான் கிருபாகரன் என்பவர் நேற்று இரவு தனது மனைவி பிரின்லியுடன் உறவினர் திருமணத்திற்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கடலூர் செல்ல புதுச்சேரி பேருந்தில் பயணம் செய்தபோது… மதுரவாயல் டோல்கேட் அருகே தீடீர் என்று தனது பையை காணவில்லை என்று பேராசிரியர் கூச்சலிட்டார். அதனால் பேருந்து பாதியில் நின்றது. கீழே இறங்கிய பேராசிரியர் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நமது நிருபர்…