யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு செந்தில் பாலாஜி தவறான முடிவு.. அமமுக அமைப்பு செயலாளர் பழனியப்பன் பேட்டி…
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்
பூத்கமிட்டி அமைக்கும் பணி மற்றும் ஆலோசனை கூட்டம் கழக அமைப்புச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் பழனியப்பன், கடந்த 4 நாட்களாக செய்தி தாள்களிலும், ஊடகங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து செந்தில்பாலாஜி பிரிந்து திமுகவில் இணைவதாக பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது, இதற்கு செந்தில்பாலாஜி எவ்வித பதிலும் அளிக்காமல் அமைதியாக இருப்பது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.
அமைச்சர் விஜய பாஸ்கர், கடம்பூர் போன்றவர்கள் எல்லாம் பேசுவதற்கென்றே பேசி வருகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது கொள்கை கூட்டம், தற்போது இருக்கும் அரசியல் நிலவரம் கூடாரம் போல உள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வென்று அந்த கூடாரத்தில் உள்ள நல்லவர்கள் மீண்டும் திருந்தி கழகத்தில் வந்து இணைவார்கள், எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும்பொழுது கழகத்திலிருந்து பரிந்து திமுகவில் சேர்ந்தவர்கள் அடையாளம் தெரியாமல் போயிவிட்டனர். செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தால் அதே நிலைதான் ஏற்படும். யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு தவறான முடிவு எடுத்திருக்கலாம்…
Ak@ஆனந்தகுமார்

