Sat. Mar 7th, 2026

ஒன்பதாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக | மூவர் கைது |

பாண்டிச்சேரியை அடுத்த ஆரோவில் நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி நரேஷ்/19 என்பவருடன் பழகி அவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். அங்கு அந்த மாணவிக்கு நரேஷ் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் அல்லாமல் அவரது நண்பர்களான வானூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த ராஜா என்கிற ராக்கெட் ராஜா வயது 32 என்பவனும் மற்றும் மொரட்டாண்டியைச் சேர்ந்த சூரியா/19 ஆகிய மூவரும் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவி மாயமானதை அடுத்து ஆரோவில் காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் கொடுத்திருந்தார்.

நேற்று இரவு அந்த மாணவி தன்னுடைய வீட்டிற்கு சுயநினைவு இல்லாத நிலையில் வந்ததை அடுத்து அந்த மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வந்த ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தியதில் மூன்று இளைஞர்கள் அந்த மாணவியை பாலியல் வன்புணர்ச்சி செய்தது தெரியவந்தது. அவர்கள் மூவரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்…

நமது நிருபர்