பல பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் மைனர்குஞ்சு | கொடூர கொலை |
ஈரோடு அருகே பல பெண்களுடன் தொடர்புவைத்த மைனர்குஞ்சு கொடூர கொலை.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ளது வால்நாயக்கன்பாளையம். இவ்வூரை சேர்ந்தவர் சடையப்பன் மகன் சிவக்குமார் (42) இவரை நேற்றிரவு சுமார் பதினோரு மணியளவில் கொடுமுடி வடக்கு புதுபாளையம் மயானம் அருகே தனது டூவீலரில் வந்தவரை வழிமறித்து ஒரு கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கொடுமுடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைபற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த முதற்கட்ட விசாரணையில் சிவக்குமாருக்கு திருமணமாகி இரு மகள்கள், மற்றும் ஒருமகன் உள்ளநிலையில் இவரது மனைவிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 12 வருடங்களாக பிரிந்து வாழ்வது தெரியவந்துள்ளது.
மேலும் மனைவியை பிரிந்த சிவக்குமாருக்கு கோவிந்தராஜன்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடனும், காசிபாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடனும் அதுபோக பல பெண்களுடனும் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் நேற்றிரவு சிவக்குமாரை பின்தொடர்ந்த கொலையாளிகள் ஆள்நடமாட்டமில்லாத வடக்கு புதுபாளையம் மயானம் அருகே வைத்து வெட்டி கொலை செய்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றியுடள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த கொடுமுடி காவல்துறையினர் கள்ளக்காதல் தகராறில் சிவக்குமார் கொலை செய்ப்பட்டாரா என்ற கோணத்தில் தங்களது விசாரணையை துவக்கியுள்ளனர்…
நிருபர் சண்முகசுந்தரம்
